Monday 6th of May 2024 10:13:12 PM GMT

LANGUAGE - TAMIL
-
கனடாவில் விற்பனைக்கு வந்துள்ள  போலி சானிடைசர் குறித்து எச்சரிக்கை!

கனடாவில் விற்பனைக்கு வந்துள்ள போலி சானிடைசர் குறித்து எச்சரிக்கை!


கனடாவில் கள்ளச் சந்தையில் உற்பத்தி செய்யப்பட்ட போலி கை சுத்திகரிப்பு திரவம் (hand sanitizer) விற்பனை செய்யப்படுவதாக கனடா சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

டெய்லி ஷீல்ட் (Daily Shield) எனப்படும் அங்கீகாரம் பெற்ற சானிடைசரை ஒத்ததாக போலி சானிடைசர்கள் தண்டர் பேவில் உள்ள டொலராமா (Dollarama ) கடையில் விற்பனைக்கு வந்துள்ளதைக் கண்டறிந்துள்ளதாகவும் கனடா சுகாதாரத் துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி சானிடைசர் NPN 80098979, Lot 6942 என்ற குறியீட்டு இலக்கத்துடன் 250 மி.லீ. அளவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காலாவதி ஆண்டு 2023 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெய்லி ஷீல்ட் பெயருடன் விற்பனைக்கு வந்துள்ள போலி சானிடைசர் சுகாதாரத் துறையின் அங்கீகாரம் பெறாதது. அறியப்படாத ஒரு சூத்திரத்துடன் தயாரிக்கப்படுவதால் இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்வதில் பயனுள்ளதாக இருக்காது. அத்துடன் இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்துகள் ஏற்படலாம் எனவும் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த போலி சானிடைசர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கனடா சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர். இதேவேளை, டெய்லி ஷீல்ட் வகை சானிடைசர் விற்பனையை நிறுத்த டொலராமா வணிக நிறுவகம் ஒப்புக்கொண்டுள்ளது.

அத்துடன், போலி சானிடைசர் குறித்து அவதானமாக இருக்குமாறு கனேடியா்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போலி சானிடைசரை பாவித்தவா்கள் தங்களின் உடல் நலனில் ஏதேனும் பாதிப்புக்கள் தென்பட்டால் உங்கள் பகுதி மருத்துவா்களை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE